குருபத்தி கொண்டாள் கொடுத்த கனியை
யரிபற்றி யன்றுவந் துண்டான் - குருபத்திக்
கேற்றமரி பத்தியின்மே லென்று தெளிவுறச்
சாற்றச் சவரியே சான்று
குரு பத்தி கொண்டாள் - குரு பத்தியின் உருவகமாக விளங்கியவளான சவரி
கொடுத்த கனியை அரி பற்றி அன்று உவந்து உண்டான் - தந்த கனியைத் திருமால் தனது இராம அவதாரத்தில் முன்னொரு நாள் உவந்து உண்டனன்
அரி பத்தியின் மேல் குரு பத்திக்கு ஏற்றம் - திருமாலின் மீது உள்ள பத்தியை விட தனது ஆச்சார்யன் மீதான பத்திக்கு ஏற்றம் மிகுதி
என்று தெளிவு உற சாற்ற சவரியே சான்று - இக்கருத்தைத் தெளிவு படச் சாற்ற சவரியே சான்று
குரு மீது கொண்ட பத்தியில் சிறந்தவளான சவரி தந்த கனியை இராமனாக அவதாரம் செய்த ஹரி உவந்து உண்டார். இராமாயணத்தில் சவரியின் சரிதம் குரு பத்தியின் மேன்மை ஹரி பத்தியை விடப் பெரியது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யமும் ஆச்சார்யப் பிரீதிக்கென்றே செய்ததால் இவ்வாறாம்.
gurubaththi koNDAL koduththa kaniyai
aripaRRi anRuvan dhUNdAn gurubaththik
kETramari paththiyinmEl enRu theLivuRach
chAtrach savariyE sAndru
Mahavishnu in his avatar as Rama accepted with glee the fruits offered by Sabari who was an epitome of Guru Bhakthi. In fact she is the best example to show that Guru Bhakthi is valued even more than Hari Bhakthi! She waited and served Rama as a means to show her Bhakthi for her Guru!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக