அரியருளை நாடி யழுத குருகூர்க்
குருவருளை நாடிக் குறையி னொருகூறு
மண்டாது மண்வாழ வந்தாரி னம்பாவை
விண்டா ருளம்வாழும் விண்
அரி அருளை நாடி அழுத குருகூர் குரு - நம்மாழ்வார்
அருளை நாடி குறையின் ஒரு கூறும் அண்டாது மண் வாழ வந்தாரின் - நம்மாழ்வாரின் அருளை மட்டுமே நாடிய அவர்தம் மாணாக்கரான மதுரகவியாழ்வாரது
அம்பாவை விண்டார் உளம் வாழும் விண் - அழகிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்னும் பாசுரத்தைச் சொன்னவர்களின் அகமே வைகுந்தமாகும்
ariyaruLai nAdi yazhudha kurugUrk
kuruvaruLai nAdik kuRaiyin oru kUrum
aNdAdhu maNvAzha vandhArin ampAvai
viNdAr uLamvAzhum viN
The student of the guru (madhurakaviyaazhvaar) of Kurugaiyoor who wept and sought the grace of Vishnu (Nammaazhwaar), came to live on this earth without knowing a single problem. Those who chant the beautiful poem composed by him called kaNNi siruththaambu on nammaazhwaar, even vaikunta resides in their hearts!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக