உண்மை வடிவா யுலகி னின்றா
னூழின் வலியைத் தணிப்பான்
கண்மை வண்ணன் காத லாயர் கண்ணன் பகையைக் காய்வா
னண்மை விழைவோர்க் கன்பின் வடிவ
னாசா னானான் போரிற்
றிண்மை விழைவோர்க் கர்ச்சை வடிவாய்ச்
சேவை புரிவான் சிறப்பே
ஊழின் வலியை தணிப்பான் - ஊழால் அவதிப்படும் உயிர்களின் வலியைத் தணிக்க வல்லான்
கண்மை வண்ணன் - கண்மை போன்ற கருமை நிறம் கொண்டவன்
காதல் ஆயர் கண்ணன் - காதல் மிகுந்த ஆயர் மகளிரின் கண்ணன்
பகையை காய்வான் - பகைவர்களை வீழ்த்துபவன்
அண்மை விழைவோர்க்கு அன்பின் வடிவன்- அருகில் இருக்க விழையும் அடியார்கட்கு அன்பின் வடிவாய் இருப்பவன்
போரில் ஆசான் ஆனான் - மாபாரதப் போரில் அருச்சுனனுக்கு ஆசானாகத் திகழ்ந்தான்
திண்மை விழைவோர்க்கு அர்ச்சை வடிவாய் சேவை புரிவான் சிறந்து - திண்மையாக அவனைக் காண விழைவோருக்கு அர்ச்சா அவதாரமாகச் சேவை சிறந்து புரிகிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக