திங்கள், 8 ஜூன், 2026

வீற்றிருந்த எழு சீர் சந்த விருத்தம்

வீற்றி ருந்த வீடு மக்கள் 

       சுற்ற மன்பர் மீதமில்

போற்றி நின்ற நண்பர் நாடு 

     போர்தொ டுத்த மாற்றலர்

சீற்ற முற்ற கண்ண னென்று 

      தீர்ந்து போனர் யாவரும் 

 
கூற்றி னின்று தப்பி நிற்ற 

     லேற்ற மன்று சாபமே

அசுவத்தாமன் தனது சிரஞ்சீவி நிலையை எண்ணி வருந்துவதாக அமைந்த பாடல் :-

வீற்று இருந்த வீடு - தான் தங்கி இருந்த வீடு 

மக்கள் சுற்றம் அன்பர் மீதம் இல் - தனது மக்கள் உறவினர் மற்றும் அன்புடையவர்கள் யாவரும் இன்று மிச்சம் இல்லை

போற்றி நின்ற நண்பர் - துருயோதனாதிகள் 

நாடு - தமது நாடு

போர் தொடுத்த மாற்றலர்- கௌரவர்கள் மீது போர் தொடுத்த பகைவர்களான பாண்டவர்கள் 

சீற்றம் உற்ற கண்ணன் - பரிக்‌ஷித்தைக் கொல்ல முயன்றதாற்காகச் கோவம் கொண்ட கண்ண பிரான் 

என்று தீர்ந்து போனர் யாவரும் - அவ்வாறான எல்லோரும் இவ்வுலகை விட்டு சென்று விட்டனர் 

கூற்றினின்று தப்பி நிற்றல் - சாவிலிருந்து தப்பிச் சிரஞ்சீவியாய் இருப்பது 

ஏற்றம் அன்று சாபமே - ஏற்றம் என்பதே இல்லை, அது சாபமாக அமைந்து விட்டது 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

  மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க ளங்க ளீபவள்  சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்  போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...