ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

காலனை வெண்பா

 காலனைக் காலா லுதைத்தான் கதிதருநாள்

காலையு மாலையு நள்ளிரவுங் கண்விழித்

தாலவா யண்ணலி னந்தமிலாக் கீர்த்தியைச்

சாலவே யெண்ண றலை


காலனை காலால் உதைத்தான்  கதி தரு நாள்  - இயமனைக் காலால் உதைத்த சிவபெருமான் கதி அருளும் நாளான சிவ ராத்திரி அன்று 

ஆலவாய் அண்ணல் அந்தம் இல்லா கீர்த்தியை - திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனான சிவபெருமானது முடிவில்லாப் பெருமையை

காலையும் மாலையும் நள் இரவும் கண்விழித்து - காலை மாலை இரவு என முழுதும் கண் விழித்து 

சாலவே எண்ணல் தலை - எண்ணுதல் தலை சிறந்தது ஆகும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்றாடி போற்று மகவாகி எண்சீர் விருத்தம்

மன்றாடி போற்று மகவாகி யன்னை          வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்  குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்       குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து ...