வெள்ளி, 5 ஜூன், 2026

புலர்வான் சிவக்க எழுசீர் மண்டிலம்

 புலர்வான் சிவக்கப் பரியேழைப் பூட்டிப் 

          புதிதாக நாளும் வருவான்

மலர்வான் மலர்க ளெழுவா னுயிர்கள் 

         வலமாக நாளும் வருவான்
 
பலர்வாழ வுண்டி பலவா யளிக்கப் 

         பழுதின்றி நாளும் வருவான்
 
விலகாத ஞான வொளியாய் விழிக்கும்  

          விழிகாணுந் தேவ னிவனே

புலர்வான் சிவக்க பரி ஏழை பூட்டி - புலரும் வானமானது சிவக்க ஏழு குதிரைகளைப் பூட்டி

புதிதாக நாளும் வருவான் - புதுப் பொலிவுடன் தினமும் வருவான் 

மலர்கள் மலர்வான் உயிர்கள் எழுவான் வலமாக நாளும் வருவான் - மலர்கள் மலர்வதற்காகவும் உயிர்களெல்லாம் எழுவதற்காகவும் தினமும் வலமாக வருவான் 

பலர் வாழ உண்டி பலவாய் அளிக்க - பல்லுயிர்களும் வாழும் பொருட்டுப் பலவிதமாக உண்டி அளிக்க 

பழுதின்றி நாளும் வருவான் - தவறாது நாளும் வருவான் 

விலகாத ஞான ஒளியாய் விழிக்கும் - விலகாத அறிவை ஊட்டும் ஒளியாய் நமக்கெல்லாம் ஒளிரும் 

விழிகாணும் தேவன் இவனே - கண்கண்ட தெய்வம் ஞாயிறான இவன் தானே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புலர்வான் சிவக்க எழுசீர் மண்டிலம்

  புலர்வான் சிவக்கப் பரியேழைப் பூட்டிப்            புதிதாக நாளும் வருவான் மலர்வான் மலர்க ளெழுவா னுயிர்கள்           வலமாக நாளும் வருவான்   ப...