மதிபணி மின்ன மலர்நதி மின்ன
விதிதலை யோடுவிரன் மின்ன - கதிதரு
காசி கனலொடு மின்ன விரந்தனன
ம்
மாசை யகற்ற விறை
மதி பணி மின்ன - தலையில் இருக்கும் பிறைச்சந்திரனும் பாம்பும் ஒளிர
மலர் நதி மின்ன - தலையில் சூடிய தும்பை மலரும் கங்கை நதியும் ஒளிர
விதி தலை ஓடு விரல் மின்ன - நான்முகனின் வெட்டிய தலையின் ஓடும் அதை ஏந்தும் விரலும் மின்ன
கதி தரு காசி கனலொடு மின்ன - வீடு பேறு அளிக்கக் கூடிய பதியான காசி அங்கு எரியும் பல மயானக் கனல்களுடனும் மின்ன
இரந்தனன் நம் ஆசை அகற்ற இறை - இரந்து நின்றான் இறைவன் நமது குற்றங்களை அகற்றுவதற்காக
மின்னும் படியாகப் பலவனையும் பூண்டவன் சிவபெருமான், அவனும் ஒளி உருவாய் உள்ளவன், அவன் உயிர்கட்குக் கதி அளிக்கும் பதியான காசியும் மின்னுகிறது , நமது குற்றங்களாகிய இருளை நீக்கவே அவன் இரந்து நிற்கும் கோலத்தைக் கொண்டான் என்பது கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக