சனி, 20 ஜூன், 2026

விழிதரும் அறு சீர் மண்டிலம்


விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன 

மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன 

கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண 

முழுதருங் காத லன்பை யுணராதவர் மூட ரன்றே

விழி தரும் காதல் இன்பம் - விழியால் பார்த்து அனுபவிக்கக் கூடிய காதலின் இன்பமானது 

இடி முன் வரும் மின்னல் என்ன - இடிக்கு முன் ஒளிரும் மின்னலைப் போன்றது 

மொழி தரும் காதல் இன்பு - இனிமையான மொழியால் வரும் காதல் இன்பமென்பது 

சுவை முன் வரும் வாசம் என்ன - ஒரு சுவையான பொருளைச் சுவைக்கும் முன்னர் நம்மை அடையும் அதனது வாசம் போன்று 

கெழு தரும் காதல் இன்பு - போகப் போக வளமை தரும் காதல் இன்பமானது 

கிணற்று ஊறும் நந்நீரின் வண்ணம் - கிணற்றில் தன்னை என்றும் புதிப்பித்துக் கொண்டே இருக்கும் நல்ல நீரைப் போன்றது 

முழு தரும் காதல் அன்பை - முழுமை தரும் காதல் என்னும் அன்பின் வடிவை 

உணராதவர் மூடர் அன்றே - உணராமல் தன் வாழ்வைக் கடத்துவார் மூடர் ஆவார் அன்றோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

  மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள்  சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்  போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...