புதன், 11 பிப்ரவரி, 2026

நிறைமதி நாண வெண்பா

நிறைமதி நாண நிறந்திகழ் சோலை

நறைமலர் நாண நடையார் - மறைமுனி 

யூர்தி யனநாண வோதத் துதித்தாஅண்

மார்திகழ வாஞ்சைமிகு மாற்கு 

நிறை மதி நாண - முழு நிலவும் நாணும்படியாக; நிறம் திகழ் சோலை நறைமலர் நாண - பல வண்ணம் படைத்த சோலைகளிள் உள்ள வாசம் மிக்க மலர்களும் நாணும்படியாக ; மறை முனி ஊர்தி நடை ஆர் அனம் நாண -அழிகிய நடைகொண்ட நான்முகனின் வாகனமான அன்னப் பறவையும் நாணும்படியாக; ஓதத்து உதித்தாதாஅள் - அதீத அழகைப் படைத்தவளுமான பாற்கடலில் உதித்தவளுமான திருமகள்; மார் திகழ வாஞ்சை மிகும் மால் கு - தன் மார்பில் திகழ்வதால் நாரணனின் விருப்பமும் கூடுகிறது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...