வியாழன், 5 மார்ச், 2026

ஓங்கு மலர் குறள் வெண்பா

 ங்குமலர்ச் செம்பாத மோச்ச ரவணங்கு 

தாங்குபவர்க் காசானைச் சாற்று 


ஓங்கு மலர் செம் பாதம் - பெருமைக்குரிய,  மலரைப் போன்ற , செம்மையான திருவடி 

ஓச்சு - உயர்த்தும் 

அரவு அணங்கு தாங்குபவர்க்கு - பாம்பையும் கங்கையையும் தனது சடையில் தாங்கும் சிவபெருமானுக்கு 


ஆசானைச் சாற்று - குருவாக விளங்கும் முருகப் பெருமானைப் போற்றுவாயாக 


முருகனின் ஆறெழுத்து மந்திரம்  இப்பாடலுள் கரக்கப் பெற்றது 


Ongumalarch chempAdha mOchch aravaNangu 

thAngubavark kAsAnaich chARRu 

The one whose holy feet are, lotus like, lifted up in Urdhva Nadana pose, the one who holds snake and the holy ganges in his matted locks, has for his Guru Swami Natha, let us sing his praises! Murugan's 6 lettered mantra is encoded into this kuRaL veNbA 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இளவேனில் பஃறொடை வெண்பா

குயிலினங்கள் கோது கலமாகக் கூவு மயினடிக்குங் காட்டின் மலர்மலரு மீளு மயலிடம் பேர்ந்த வணிபறவைக் கூட்ட  மயன்மிக்க பல்லுயிர்கள் வாஞ்சையுடன் சேரு ...