திங்கள், 20 ஜூலை, 2026

நாகணை நாதன் முற்றுமோனை அறுசீர் விருத்தம்


நாகணை நாதன் ஞான்று 
     நல்லற ஞால நாட்டத்
தாக(ம்)தீர் தண்ணீர் தந்து 
    தாரணி தழைக்கச் சார்வா
மேக(ம்)தோய் விண்ணின் வீழ்ந்து 
    மெய்த்தவர் வீழ்வை வீழ்த்த
வாகுரு மலர்ந்து வைய 
    மாற்றலர் மாய்ப்பான் வந்தே

நாகணை நாதன் ஞான்றும் - நாகத்தில் அணையும் நாதனான திருமால் அனைத்துக் காலத்திலும் 
நல் அறம் ஞாலம் நாட்ட - நல்ல அறத்தை அவன் காக்கும் ஞாலத்தில் நாட்டும் பொருட்டு 
தாகம் தீர் தண் நீர் தந்து - தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரைத் தந்து 
தாரணி தழைக்க சார்வாம் - இவ்வுலகம் தழைக்கச் சார்வாகும் 
மேகம் தோய் விண்ணின் வீழ்ந்து - மேகத்தின் தோய்ந்த வாழும் விண் வாழ்வை விட்டு இழிந்து 
மெய் தவர் வீழ்வை வீழ்த்த - மெய்யான தவத்தவர்களை வீழ்வினின்று காக்க 
வாகு உரு மலர்ந்து - அழகிய ஒரு உருவம் எடுத்து 
வையம் வந்து - இப்புவியில் உதித்து 
மாற்றலர் மாய்ப்பான் - பகைவர்களை அழிப்பான் 

கார்மேகம் போன்ற தோற்றம் கொண்ட திருமால் மிக்க கருணை கொண்டவன் என்பதாலும், அதே போன்று அறத்தின் வழி தவறியவர்களை அழிக்க வெள்ளம் போல் வந்து அழிப்பான் என்றதாலும் மேகத்தின் உவமை கூறப்பட்டது 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாகணை நாதன் முற்றுமோனை அறுசீர் விருத்தம்

நாகணை நாதன் ஞான்று       நல்லற ஞால நாட்டத் தாக(ம்)தீர் தண்ணீர் தந்து      தாரணி தழைக்கச் சார்வா மேக(ம்)தோய் விண்ணின் வீழ்ந்து      மெய்த்தவர...