புதன், 4 மார்ச், 2026

செவ்வேடன் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச்

செவ்வேடன் செவ்வாயாற் சீரருளச் - செவ்வேடாம்

வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும்

வாயலரும் வாயலரா மைக்கு 


செவ்வேடன் சீர்த்தியை செந்தமிழால் செப்பற்கு

செவ்வேள் தன் செவ்வாயால் சீர் அருள செ ஏடு ஆம் 

வாய் அலரும் சொல் எல்லாம் மாற்று அறியா மாந்தர்க்கும் 

வாய் அலரும் வாய் அலராம் ஐக்கு 


செவ்வேள் தன் சீர்த்தியை செந்தமிழால் செப்பற்கு செ வேடன் செவ்வாயால் சீர் அருள - செவ்வேடனாகிய தனது கீர்த்தியைச் செந்திமிழால் சொல்வதற்குச் செவ்வேள்(முருகன்) தன் செம்மை பொருந்திய வாயால் ஆசியை அருள  


மாற்று அறியா மாந்தர்க்கும் வாய் அலரும் சொல் எல்லாம் செ ஏடு ஆம் - பதில் கூட கூறத் தெரியாத மாந்தருக்கும் அவர்கள் வாயிலிருந்து மலரும் சொற்கள் யாவும் செம்மையான ஏட்டைப் போன்ற உயர் குணம் பெறும்

ஐக்கு- தலைவனாகிய முருகப் பெருமானுக்கு 

வாய் அலரும் - வாயினிருந்து வரும் பழிச் சொல்லும் கூட 

வாய் அலராம்  - சீர் பொருந்திய மாலை ஆகும் 


முருகப் பெருமான் தனது பெருமையைச் செந்தமிழால் உரைக்க தன் திருவாயால் ஆசி வழங்க, பதிலளிக்க இயலா மாந்தருக்கும் வாயின் மலரும் சொல் எல்லாம் செம்மை உடைய ஏடு போன்றதாகும்! நமது தலைவன் பழிச்சொல்லையும் செந்தமிழாக இருப்பின் பெருமைக்குரிய மாலையாகக் கொண்டு நம்மை அருளும் கருணைக் கடலன்றோ!

chevvEdan chIrthiyaich chendhamizhaR cheppaRkuch

chevvEdan chevvayAR chIraruLach chevvEdAm

vAyalarun jollellA mARRaRiyA mAndharkkum

vAyalarum vAyalara maikku 


When ChevveL (Lord Murugan) grants his grace by prounouncing with his divine mouth to sing the exploits of the divine hunter(the form Lord Murugan took when he came to win Devi VaLLi's hand)  in the classical language of thamizh(chendhamizh) then, whatever the people, who do not even know to answer blurt out from their mouth becomes divine poetry! For our Lord even accepts scoldings in chendhamizh as a flower garland and showers grace on his devotees!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...