புதன், 8 ஜூலை, 2026

அழகே அறுசீர் மண்டிலம்

அழகே யழுக்கா றுறுமழகே 

      அடியா லளந்தாய் மூவுலகை 

கழுகே யதன்மீ தெழுமரசே 

      கரியி னிடர்தீர்த் தருடேவே 

தொழுகே னுனைநீங் கொருவருமே 

        சுடரா ழிசங்கா முழுமுதல்வா  

பழுதாம் வினைநீங் குயர்வுறவே 

      பகர்வேன் பெயரா யிரமுனதே 


அழகே அழுக்காறு உறும் அழகே - அழகே பொறாமை கொள்ளும் அளவிற்கு அதீத அழகனே 

அடியால் அளந்தாய் மூ உலகை - நீ மூவுலகையும் திரிவிக்ரமனாக அளந்தாய் 

கழுகே அதன் மீது எழும் அரசே - கருடாழ்வார் மீது நீ என்றும் எழுந்தருள்வாய் 

கரியின் துயர் தீர்த்து அருள் தேவே- கஜேந்திரனின் துயர் தீர்த்து அருளிய தேவன் நீயே 


உனை நீங்கு ஒருவருமே தொழுகேன் - உன்னை நீங்கி ஒருவரையும் நான் தொழ மாட்டேன் 


சுடர் ஆழி சங்கா முழு முதல்வா- சுடர் ஆழியும் சங்கும் கையில் கொண்டவனே முழுமுதற் கடவுளே 


பழுதாம் வினை நீங்கு உயர்வு உறவே - பழுதுபடுத்தும் வினைகள் நீங்கி உயற்வு என்பதை வாழ்வில் எட்ட 


பகர்வேன் பெயர் ஆயிரம் உனதே - உனது ஆயிரம் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பேன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழகே அறுசீர் மண்டிலம்

அழகே யழுக்கா றுறுமழகே        அடியா லளந்தாய் மூவுலகை  கழுகே யதன்மீ தெழுமரசே        கரியி னிடர்தீர்த் தருடேவே  தொழுகே னுனைநீங் கொருவருமே      ...