புதன், 8 ஜூலை, 2026

செம்பாகம் செவ்வயிற் செவ்வேள்

 செம்பாக நங்கைக்குத் தந்தாரின் றீவிழியி

னம்பா லுதித்த வழகுருவே - கொம்பார்
குறமக ணாதா குகாகுமரா வென்பார்க்
கறமுகனா யாள்வா யருள்


செம்பாகம் நங்கைக்கு தந்தாரின் - தனது உடலின் செம்மையான பாகத்தை நங்கைக்கு தந்தவரான சிவ பெருமானின்

தீ விழியின் - நெருப்பை உமிழக் கூடிய நெற்றிக் கண்ணின்

அம்பால் - கணை போன்ற விடுத்தலால்

உதித்த அழகு உருவே - அவதாரம் எடுத்த அழகே உருவானவனே

கொம்பு ஆர் குறமகள் - அழகிய கொடியான வள்ளி தேவியின் 

நாதா - தலைவனே 

குகா - குகனே

குமரா - குமரனே 

என்பார்க்கு - என்பவர்களுக்கு

அற முகனாய் - அறத்தின் வழி செல்பவனாய்

ஆள்வான் அருள் - அருளை அளிப்பான்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங் கண்ட வந்நொடி யேகவி கள்பிற...