வியாழன், 9 ஜூலை, 2026

சென்றுதித்து நரசிம்மார் விருத்தம்

 சென்றுதித்துத் தூணிலே சிறுவன்வாழப் பண்டுநாள் 

வென்றவேந்த கந்தையை யுகிர்த்தெறிந்து வந்தனை 

யன்றுதோன்றி யன்றளிக்கு மாளரிக்கு மேலொரு 

வின்றுமன்று மென்றுங்கூற வீரமாளு தேவெதோ 


பண்டு நாள் சிறுவன் வாழ தூணிலே சென்று உதித்து - முன்னொரு நாளில் சிறுவனாகிய பிரகலாதன் வாழ்வதற்காகத் தூணிலே சென்று உதித்து 

வென்ற வேந்து அகந்தையை - யாவரையும் வென்றோம் என்ற அகந்தை மிகுந்த இரணியனின் அகந்தயை 

உகிர்த்து எறிந்து உவந்தனை - உனது நகங்களால் கிள்ளி எறிந்து மகிழ்ந்தாய் 

அன்று தோன்றி அன்று அளிக்கும் ஆள் அரிக்கு மேல் கூற - அப்போதே தோன்றி அப்போதே கேட்ட யாவையையும் அளிக்கும் வல்லமை உள்ள நரசிம்மருக்கு மேலே சொல்லும்படியாக 

இன்றும் அன்றும் என்றும்  - அன்றோ இன்றோ அல்லது என்றென்றுமோ 

ஒரு ஈரம் ஆளு தே எதோ- மிக்க கருணை கொண்ட ஒரு தெய்வம் எங்கு உள்ளதோ?  இல்லை என்பதாம் 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சென்றுதித்து நரசிம்மார் விருத்தம்

 சென்றுதித்துத் தூணிலே சிறுவன்வாழப் பண்டுநாள்  வென்றவேந்த கந்தையை யுகிர்த்தெறிந்து வந்தனை  யன்றுதோன்றி யன்றளிக்கு மாளரிக்கு மேலொரு  வின்றுமன...