போர்நடத்த வாயுதங்க டேவையில்லை புன்னகை
சீர்நடத்து கீதைசொன்ன தேவதேவ னாயினும்
தேர்நடத்து பாகனாய்த் திறந்தமேனி புண்களைப்
பார்நடத்த வின்றுமேந்து கேணியாளு பரமனே
போர் நடத்த ஆயுதங்கள் தேவை இல்லை - பாரதப் போரை நடத்த உனக்கு ஆயுதங்கள் ஏதும் தேவைப் படவில்லை
புன்னகை சீர் நடத்து கீதை சொன்ன - புன்னகைத்துச் சீரான வழியில் பார்த்தனையும் பிற்கால மனிதர்களையும் நடக்க உதுவும் கீதோபதேசம் சொன்ன
தேவ தேவன் ஆயினும் - தேவர்களுக்கெல்லாம் தேவனாய் நீ இருந்த போதிலும்
தேர் நடத்து பாகனாய் - பார்த்தனுக்குத் தேரோட்டியாய்
திறந்த மேனி புண்களை - திறந்த மேனியில் பல புண்களைத் தாங்கி (எதிரிகளின் கணைகளினின்று)
பார் நடத்த- இவ்வுலகை வழி நடத்த
இன்றும் ஏந்து - இன்றளவும் உன் முகத்தில் தாங்கி நிற்கும்
கேணி ஆளு பரமனே - திருவல்லிக்கேணி என்னும் திவ்ய தேசம் ஆளும் பரமனன்றோ நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக