செவ்வாய், 14 ஜூலை, 2026

மாலின் மருகோனே (செவ்வாயிற் செவ்வேள்)

 மாலின் மருகோனே குறவள்ளி மணவாளா

வானின் குலமீள மலைசாடு கதிர்வேலா
கோல மயிலேறு குணநேரி லுமைபாலா
கூறு மடியார்கள் குறைதீர்க்கு முயிர்நேயா
ஞால மகிழ்வாழக் கொடுசூரன் குலகாலா
ஞான வுரைகூறு சிவமோன குருநாதா
மாலி லுழன்றாடு மடியேனைக் கரைசேர்வா

வான ருயர்மாதின் மனமாளு பதிசீலா


மாலின் மருகோனே - திருமாலின் மருகனே !

குற வள்ளி மணவாளா - குறப்பெண் வள்ளி தேவியை (களவில்) மணந்தவனே

வானின் குலம் மீள மலை சாடு கதிர்வேலா - வானோர் தன் இழந்த அரசைப் பெற்று முன்போல் வாழ கிரௌஞ்ச மலையை கதிர்வேலால் சாடியவனே

கோல மயில் ஏறு - அழகிய மயிலை தனது ஊர்தியாகக் கொண்ட

குணம் நேர் இல் உமை பாலா - ஒப்பற்ற குணவதியான உமையம்மை புதல்வா

கூறும் அடியார்கள் குறை தீர்க்கும் உயிர் நேயா - உனது பெயரைக் கூறிய மாத்திரத்திலேயே அடியரின் குறைகளைக் களையும் ஜீவர்களின் மீது அதீத நேயம் கொண்டவனே

ஞாலம் மகிழ் வாழ - அனைத்து உலகங்களும் மகிழ்வாக வாழும் பொருட்டு

கொடு சூரன் குல காலா - கொடும் சூரரின் குலம் அழிந்து போக காலனாய்த் திகழ்ந்தவனே

ஞான உரை கூறு - பிரணவத்தின் பொருளை விளக்கிய

சிவ மோன குரு நாதா - மோன குருவான சிவனுக்கே குரு நாதனாகிய சாமி நாதனாய்த் திகழ்பவனே

வானர் உயர் மாதின் - வானோர்களின் உயர் செல்வமான ஒப்பற்ற தேவயானை தேவியின்

மனம் ஆளும் பதி சீலா - (கற்பு மணத்தினூடு)மனத்தை ஆளும் மணாளர்களின் சிறந்தவனே

மாலில் உழன்று ஆடும் அடியேனை கரை சேர் வா- மயக்கித்தின் இவ்வுலகில் உழலும் அடியேனை கரை சேர்க்க வருவாயாக






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாலின் மருகோனே (செவ்வாயிற் செவ்வேள்)

  மாலின் மருகோனே குறவள்ளி மணவாளா வானின் குலமீள மலைசாடு கதிர்வேலா கோல மயிலேறு குணநேரி லுமைபாலா கூறு மடியார்கள் குறைதீர்க்கு...