அறுவர் பயந்த வறுமுகனை யெண்ண
மறுமையு மிம்மையும் வாய்க்கும் - வெறுமையுந்
துன்பமும் விட்டோடுந் தொய்விலா ஞானமு
மன்பு மலரு மழகு
அறுவர் பயந்த அறுமுகனை எண்ண - ஆறு அன்னைமார்கள் ஆன கார்த்திகை பெண்கள் பாலூட்டி வளர்த்த ஆறுமுகப் பெருமானைச் சிந்திக்க
மறுமை உம் இம்மை உம் வாய்க்கும் - இவ்வுலகும் பின்பு மறுமையும் இரண்டுமே சிறக்கும்
வெறுமை உம் துன்பம் உம் விட்டு ஓடும் - நமது வாழ்வில் வெறுமையும் சரி துன்பங்கள் சரி இருந்த சுவடு தெரியாமல் நம்மை விட்டு ஓடி விடும்
தொய்வு இ(ல்)லா ஞானம் உம் அன்பும் - குறையாத அன்பும் அறிவும்
மலரும் அழகு - நம்மிடம் அழகாக மலரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக