மறந்து மறவா திருக்க மனத்தாண்
மறச்சிறுமி நாதா மயிலே -றறுமுகா
செந்தமிழாற் சீருரைத்துச் செவ்வேளுன் றாள்பணிய
முந்துவினை மூளா தொழி
மற சிறுமி நாதா - மறச்சிறுமியான வள்ளி பிராட்டி நாதனே
மயில் ஏறு அறுமுகா - மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானே
மறந்தும் மறவாது இருக்க மனத்து ஆள் - நான் மறந்து கூட (நின்னை) மறந்து போகாது இருக்கும் படி (எனது) மனத்தை ஆள்வாயாக
செம் தமிழால் சீர் உரைத்து - செம்மை பொருந்திய தமிழ் மொழியால் உனது பெருமைகளைச் சொல்லி
செவ்வேள் உன் தாள் பணிய - செவ்வேளாகிய முருகனே உனது தாளைப் யான் பணிய
முந்து வினை மூளாது ஒழி - முந்தி வரும் எனது பல பிறவிகளில் சேர்த்த வினைகளை நீ தான் எழாது ஒழிக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக