சனி, 22 ஆகஸ்ட், 2026

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

 மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க ளங்க ளீபவள் 

சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள் 

போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ

ணீர்பி றந்த தாயி னீர்மை யெண்ணொ ணாத நீர்மையே 

மார்பு இருந்து மன்னனுக்கு மங்களங்கள் ஈபவள் - தந்து தலைவனான திருமாலின் மார்பில் வசித்துக் கொண்டு அவருக்கு மங்களம் விளைவிப்பவள் 

சீவனுக்கு சார்பு இருந்து வீடு பேறு தருபவள் - வழிமறந்து உழலும் சீவாத்துமாகட்கு வீடு பேறு தரப் புருஷகாரம் செய்பவள் 

போர் புரிந்து வெல்வள் அல்லள்- போர் புரிந்து தீயவரை அழிக்க வேண்டும் என்ற அவசியம் இவளுக்கு இல்லை 

புன்சிரித்து வெல்பவள் - சிரித்த மாத்திரத்தில் வெற்றி பெறுபவள் 

நீர் பிறந்த தாயின் நீர்மை - அலைகடலில் உதித்த திருமகளான தாயின் நீர்மை 

எண் ஒண்ணாத நீர்மையே - எண்ணிக் கூட பார்க்க முடியாத கருணையாகும் 

mArbirundhu mannanukku mangaLangkaL IbavaL 

chArbirundhu jEvanukku vIdupERu tharubavaL 

pOrpurindhu velvaLallaL punsiriththu velbavaL 

nIrpiRandha thAyin nIrmai yeNNoNAdha nIrmaiyE 


Residing in the chest of her Lord, she grants auspiciousness to him, she grants Moskha to Jeevatmas by doing purushakara, she does not have to fight to win against evil, she achieves this by merely smiling, the compassion of the Goddess Lakshmi who appeared in the milky ocean is beyond thought!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங் கண்ட வந்நொடி யேகவி கள்பிற...