செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

வேலை மறந்தாலும் (செவ்வாயிற் செவ்வேள் வெண்பா)

வேலை மறந்தாலும் வேலை மறவேன்யான்

வேளை மறந்தாலும் வேளை மறவேன்யான்
காலை மறந்தாலுங் காலை மறவேன்யான்
கோலக் குறத்தியின் வேந்து


வேலை மறந்தாலும் - நான் செய்ய வேண்டிய வேலையை மறந்தாலும்

கோலக் குறித்தியன் வேந்து - கோல குறத்தி வள்ளியின் நாதனான முருகனின்

வேலை மறவேன் யான் - வேலை என்றும் மறவேன்

வேளை மறந்தாலும் - நேரத்தை மறந்து போனாலும்

வேளை மறவேன் யான் - செவ்வேள் ஆகிய முருகனை என்றும் மறவேன்

காலை மறந்தாலும் - காலை என்ற பொழுது புலர்ந்தது என்பதையே கூட மறந்தாலும்

காலை மறவேன் யான் - முருகனின் திருவடியை மறவேன் யான்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங் கண்ட வந்நொடி யேகவி கள்பிற...