மான்மழு கையிற் கொண்டான்
மாதிடம் பாகந் தந்தான்
நான்மறை பொருளாய் நின்றான் நஞ்சுணுந் தியாகப் பெம்மான்
கூன்பிறை சூடு மெம்மான்
கூத்திடு கோனா மன்றான்
வான்சுடர் மலையா நின்றான்
மான்மயக் கரிவா னன்றே
மாது இடம் பாகம் தந்தான் - சக்தியிடம் தனது பாதியைத் தந்தவன்
நான் மறை பொருளாய் நின்றான் - நான்கு வேதங்களின் பொருளாய் நின்றவன்
நஞ்சு உ(ண்)ணும் தியாக பெம்மான் - ஆலஹால விடத்தை உண்டு உயிர்களைக் காத்த தியாகத்து உருவெடுத்த பெருமான்
கூன் பிறை சூடும் எம் மான் - கூன் பிறையை தனது தலையில் சூடும் எமது தலைவனான சிவபெருமான்
கூத்திடு கோன் ஆம் மன்றான் - ஆடலுக்கு அரசனான (நடராஜ) சிதம்பரத் தலத்தில் உறைபவன்
வான் சுடர் மலையா நின்றான் - திருவண்ணாமலையில் வானளவு வளர்ந்த சுடராய் நின்றவன்
மால் மயக்கு அரிவான் நன்றே - எமது மயக்கத்தையும் நன்று களைவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக