நீர்வேண் மருகனாய் வந்தாளு
நீர்வேண் முருகனாஞ் செந்தேனே
சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கேநீர்வேண் மருகனாய் வந்தாளு
நீர்வேண் முருகனாஞ் செந்தேனே
சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கேசெய்ய நிறத்தா டிருதருவாள் வேல்விழியா
லுய்ய வழிதருவா ளோரலையின் - மெய்யெடுத்தாண்அழுந்தே னென்று சொல்வதி யார்க்கு மெளிதன்றோ
செழுந்தே னென்றுஞ் சேர்ப்பது சிற்று மெளிதன்றேவாணா டோறும் பல்லிடஞ் செல்ல வகைசெய்யுந்
தூணா நின்ற நின்னுடற் பாரச் சுமைதாங்கீ
கோணஞ் செய்து குந்துதற் கேதாங் குணக்காலே
நாணா துன்னைப் போற்றுவ னன்றி மறவேனே
வேனாதாவீ டாறாமா தீரா வாதாளீ சாவா
வாசாளீ தாவாரா தீமாறாடா வீ தானாவே
#மாலைமாற்று
புகழ்பா டடியார் புலமையெனக் கில்லை
யிகழ்பா டெனதிழிசொ லேற்றாய்! - நிகழ்காலவிழுந்தால் விழா இழந்தால் எழுச்சி
பொருணோக்கிச் சென்ற பொருடான் பெரிதோ பொறுத்திருந்தா
ளிருணோக்கி நின்னினை வாழ்ந்து குறைந்த வெடைசிறிதோ
மருணோக்கி வாரா திராதே விரைவின் மணம்புரிவா
வருணோக்கி செந்தமிழ் நாடா வகவை வளர்கிறதே
கங்கைக்கு மன்னு புகழ்தந்த தாமரைக் காலுடைய
செங்கைக்கு மின்னு நகையாழி சங்கந் திகழ்ந்தொளிரு
நங்கைக்கு மன்ன வனேயிரு நான்கு நயந்துரைத்த
மங்கைக்கு மன்னன் கவியுண்டே சித்த மலர்வதற்கே
வேழமுக வழக னுமைமைந்தனம் மூளு வினைதீர்த்தே
யாழிமுகந் துயிலுந் திருமாலிவன் மாம னணிவேடமுப்புரமு மெரிக்க நகைத்தான்பணி திங்கண் முடிதும்பை
யப்பணிவா னடம்ப யிலுங்காடுறை யம்ப லவாணன்மேற்செக்கர் வானுன் மேனி யாவி யக்கர் சித்தர் நாதனே
சொக்க நாதர் சீட ரான சிக்க லாளு தேவனேகோடுடைய வழகன் மயிலேறியொர் கூர்வேல் கரத்தேந்துங்
காடுடைய குறத்தி மனத்தாளுநங் கந்தன் படையாறுதிருவோ டுயர்த்து மலைமாமகள் சேவை செய்யு
மரவோ டணையு மதுசூதன னன்பர் வேண்டும்
பொருளோ டனைத்தும் புவிமீதளிப் பார்கள் வாழ்விற்
றிருவோ டருளு நிறைந்தாள்வது தேவன் சித்தே
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா
விணையிலதோர் வேலேந்து போர்வீரா
குழலினிதே மணம்வீசு மலைமகளின்
குணபாலா மயிலேறு குகநேயா
வழுவறியாத் திருமாறன் மருகோனே
மடமகளா ரிருபுறமும் புடைசூழ
விழவுகந்த தணிகேசா வெமையாள்வா
தொழுமடியார் குறைதீர்க்கும் பெருமாளே
விடிய லொளியா நள்ளிரவிற்
சிறையின் மிளிர்ந்த செல்வனவன்
விதியை முடிக்க மாமனுக்கு
விளைந்தா னெட்டாம் பிள்ளையென
நொடியின் மயக்கம் வரவழைத்து
நுடங்கச் சிறைக்காப் பாளர்க
ணோவா நதியைக் கடந்தான்பி
னாயர்ப் பாடி நுழைந்திட்டு
வடிவத் தழகின் கோபியரை
வசியஞ் செய்த மதிவதனன்
வாதின் மதியின் கூர்மையினால்
வைய மீட்டா னைவர்க்குக்
கொடியோ ரழித்து நல்லாரின்
குலங்காத் தருளுச் சூளுரைத்தான்
குறைதீர்த் தருள வருமிந்நாள்
குழகன் பிறந்த வெட்டாமே
கூடி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே
நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவேஆறு முகமாய்த் தோன்று
மாறு முகமாய்த் தோன்றிக்
கூறு மடியார் துயர்தீர்
கூறு மடியா லவுணர்
நீறு முகமாய் நீத்த
நீறு முகமார் நீத
வேறு முகமாய்ச் செய்யு
மேறு மயில்வா கனனே
இடையூறு வாட்டும் போதி
லிடைவிடா துன்னை யெண்வோங்
கொடைநூறு தந்தா யானாற்விழையா தணைந்திடு காதலின் மேன்மையைச் சற்று மழையா தணைந்திடு செல்வத்து மேன்மையை யங்கத் துழையா தணைந்திடு புகழ்தரு மேன்மையை யொத்தாய் மழையே நி...