தனதனத் தனன தனதனத் தனன
தனதனத் தனன தனதனத் தனன தனதான
செவ்வாய், 28 நவம்பர், 2023
வெள்ளி, 24 நவம்பர், 2023
மடக்கணி
மாறான் புகுந்த மடநெஞ்சில் வேறான் குடிபுகுமோ
மாறான் புகுந்த மடநெஞ்சில் வேறான் குடிபுகுமே
வேறான் புகுந்த மடநெஞ்சில் மாறான் குடிபுகுமோ
வேறான் புகுந்த மடநெஞ்சில் மாறான் குடிபுகுமே
செவ்வாய், 21 நவம்பர், 2023
செவ்வேள் விருத்தம்
ஆடு மயிலம ராறு முகன்றனை
நாடும் வரமெனக் கருள்வாயே
ஆதி சிவனுமை ஆரத் தழுவிய
சேயி னருள்பெறக் கடவேனோ
திங்கள், 20 நவம்பர், 2023
மடக்கு வெண்பா
பாரமர பாரமற பாதையுற பாமரர்கள் பாரமற பாராளும் பாங்குறவே - பாராளும் பாரமரர் பாரதப் பாரமரில் பாரமறப் பாரமர பாருதித்தாய்ப் பார்த்து
சிலேடை கலிப்பா
இருமடந்தை இணைந்திருக்க இலங்கொளியாய் நிற்பவன் திருமலையி லெழுந்தருளுந் திருவடியார் தற்பரன் செருவிருந்து செகுத்தெறிந்து செகந்தனையும் காப்பவன் அருமருந்து அலையமர்ந்த அமரர்குல வேந்தனே -தரவு கொச்சகக் #கலிப்பா
திங்கள், 13 நவம்பர், 2023
கந்தர் சஷ்டி 2023
காப்பு :-
முகமா றுடையான் நுதற்கண் புதல்வன் முருகுருவ முகமா றுடையான் மொழியான் மொழிய உளத்தமர்ந்து முகமா றுடையான் முதற்கண் தொழுது வினையகற்றி முகமா றுடையான் மருகன் புகழை உரமளியே
வெள்ளி, 10 நவம்பர், 2023
ஏகபாதம்

மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
கட்டளைக்கலித்துறை ஏகபாதம்
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...