வியாழன், 28 டிசம்பர், 2023

கோதை ஏகபாதம்

 

கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே
கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே
கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே
கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே
கோது (ஐ) அளித்திடும் ஆலை உவந்தான் குணம் ஒழிந்தே
கோதை அளித்திடும் மாலை உவந்தான் குணம் ஒழிந்தே
கோதை அளித்திடும் மாலை உவந்தான் குணம் மொழிந்தே
கோதை அளித்திடும் மாலை உவந்தான் குணம் ஒழிந்தே
1.குற்றத்தைத் தரும் ஆலை (கள்ளை) உவந்தான் நற்குணங்கள் ஒழிந்து
2.பெண் (கோதை) தரும் மயக்கத்தை உற்றான் நற்குணங்கள் இல்லாத படியால்
3.கோதை (ஆண்டாள்) சூடிக் கொடுத்த மாலையை உவந்தவனான, ஶ்ரீமன் நாராயணனின் கலியாண குணத்தை மொழிந்து மனது தூய்மை ஆக
4.ஆண்டாள் தரும் பாமாலையான திருப்பாவையை உவக்கும் பக்குவம் பெற்றான் தனது (முன்பிருந்த) தீய குணங்கள் ஒழிந்த படியால்
இங்குத் தோன்றா எழுவாயாக ஜீவாத்மா குறிக்கப் பட்டுள்ளது, விஷய சுகங்களில் பற்று வைத்து பிறகு தாயாருடன் கூடிய பெருமானின் அருளால் அவை நீங்கி பகவத் விஷயத்தில் ஈடுபாடு உண்டாகி உய்வு அடைகிறவாறு
 
படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...