உதிக்குங் கதிரி னுடனிறண் மாணிக்கஞ் சூடுமுடி
மதிக்கும் பெருத்த முலைக்குங் கரமேந் தமுதலர்க்குங்
துதிக்கு மடியர் துயர்தீர் விழிக்கும் வினைத்தொடரைச்
சிதைக்குங் கமலக் கழற்கும் பணிவாந் திருமகளே
#கட்டளைக்கலித்துறை
உதிக்கும் கதிரின் உடல் நிறள் மாணிக்கம் சூடு முடி
மதிக்கும் பெருத்த முலைக்கும் கரம் ஏந்து அமுது அலர்க்கும்
துதிக்கும் அடியர் துயர்தீர் விழிக்கும் வினைத்தொடரை
சிதைக்கும் கமலக் கழற்கும் பணிவாம் திருமகளே
உதிக்கும் கதிரவனைப் போன்ற உடல் நிறத்தவள்-அம்பிகை (அவளின்) மகுடத்தில் சூடுயுள்ள மாணிக்கம் மேலுள்ள மதிக்கும் பெருத்த முலைக்கும் இரு கரத்தில் ஏந்தும் அமுதுக்கும் மலருக்கும் துதிக்குமடியரின் துயர் தீர்க்கும் விழிக்கும் வினைதொடரைச் சிதைக்கும் அவளின் தாமரை தாள்களுக்கும் யெமது வணக்கங்கள் திருமகளே ( பராசக்தியே)
லலிதா சஹஸ்ர நாமத்தின் தியான ஸ்லோகத்தை யடியொற்றி அமைந்த கட்டளைக் கலித்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக