திங்கள், 22 ஏப்ரல், 2024

மதுரகவியார் துதி

பதினொன்றே பாடியும் பன்னீரி லொன்றானப் பாகுகவி பதியென்ற மாலனைப் பாடாது மொன்றானாய்ப் பன்னிரண்டி னதிநின்ற தென்குரு கூர்நம்பி யேகொண்டாய் நாதனென கதியென் றுனக்கானக் காரிமா றப்பிராற் கண்டுவந்தே #கட்டளைக்கலித்துறை

 சீர் பிரித்து

பதினொன்றே பாடியும் பன்னீரில் ஒன்றானப் பாகு கவி பதியென்ற மாலனைப் பாடாதும் ஒன்றானாய் பன்னிரண்டில் நதிநின்ற தென் குருகூர் நம்பியே கொண்டாய் நாதன் என கதி என்று உனக்கு ஆனக் காரி மாறப் பிரான்(ஐ) கண்டு உவந்தே

 

பொருள்
 

பதினொன்று பாடல்களே (கண்ணி நுண் சிறுத்தாம்பு) பாடிப் பன்னிரு ஆழ்வார்களில் ஒன்றான மதுரகவி (பாகுகவி) பிற ஆழவார்கள் அனைவரும் திருமாலைப் பாடினார்கள், ஆனால் இவர் தனது நாதனான நம்மாழ்வாரை மட்டுமே பாடினார் அவரினால் ஈர்க்கப் பட்டு என்றவாறு 

படம் 


பதியென்ற மாலனைப் பாடாதும் ஒன்றானாய் பன்னிரண்டில் நதிநின்ற தென் குருகூர் நம்பியே கொண்டாய் நாதன் என கதி என்று உனக்கு ஆனக் காரி மாறப் பிரான்(ஐ) கண்டு உவந்தே
1
1


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...