பால விளவரசன் பார்மகளைக் கைப்பிடித்த ஞாலத் தலைவ னவமிதனில் - வாலி மராமர மேழுமொரு வம்பெய்தி வீழ்த்து மிராமன் கதைகேளுங் கள் #வெண்பா
சீர் பிரித்து
பால இளவரசன் பார்மகளைக் கைப்பிடத்த ஞாலத் தலைவன் நவமிதனில் வாலி மராமரம் ஏழும் ஒரு அம்பு எய்தி வீழ்த்தும் இராமன் கதை கேளுங்கள்
பொருள்
நவமிதனில், வாலி மராமர மேழுமொரு வம்பெய்தி வீழ்த்தும், பால இளவரசன் பார்மகளைக் கைபிடித்த ஞாலத் தலைவனான இராமனின் கதையைக் கேளுங்கள். வாலி தொளைத்த மராமரம் என்றவாறு அல்லது வாலியையும் மராமரத்தையும் வீழ்த்துமம்பு என வெடுக்கலாம்
சீர் பிரித்து
ஒருத்தி விழைவில் உளத்தில் மகிழ்ந்த கருத்தன் நவமி கருது சிரித்து மரமரம் ஏழும் ஒரு அம்பு எய்தி வீழ்த்தும் இராமன் கதை கேளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக