செவ்வாய், 28 ஜூலை, 2026

மூவாறு கண்களும் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக

மூவிரு தோள்களு முந்து தமிழுயிராய்ச்
சேவன் மயில்வேற் சிவமைந்தன் சேவைதர
மேவுவினை யாகாதோ வீண்


முத்தமிழ் மெய் ஆக - முத்தமிழ் மொழியின் மெய் எழுத்தின் குறியீடாக விளங்கும்

மூ ஆறு கண்களும் - 18 கண்களும்

முந்து தமிழ் உயிராய் - முந்து தமிழி மொழியின் உயிர் எழுத்தின் குறியாக

மூ இரு தோள்களும் - 12 தோள்களும்

சேவல் மயில் வேல் சிவமைந்தன் சேவை தர - சேவலும் மயிலும் வேற்படையும் உடன்வைத்துள்ள படி சிவமைந்தன் பத்தர்களுக்குச் சேவை சாதிக்க

மேவு வினை வீண் ஆகாதோ - பத்தர்களை வருத்தும் சூழும் வினைகள் யாவும் வீணாகப் போகாதோ? உறுதியாகப் போகும் என்பதாம்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மூவாறு கண்களும் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக மூவிரு தோள்களு முந்து தமிழுயிராய்ச் சேவன் மயில்வேற் சிவமைந்தன் சேவைதர மேவுவினை யாகாதோ வீண்