செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

பூவைவண்ணன் கலி விருத்தம்

பூவைவண்ணன் பூத்தொடுத்த பட்டர்பிரான் தோன்றலே
பாவைவண்ணப் பாத்தொடுத்த பாவையெங்கள் பாவையே
நாவைவண்ணஞ் சீரமைக்கு நாளுமுன்றன் பாடலே
கோவைவண்ணஞ் சீரமைத்த கோதையென்றும் வாழியே   

கலி விருத்தம் 

 பூவைவண்ணக் கண்ணபிரானுக்கு பூத்தொடுத்த பட்டர்பிரானின் வழித்தோன்றலே
பாவை என்ற இலக்கண்ணப் பாவை முதன்முறையாக தொடுத்த பாவை நீ
(எமது)நாவை சீரமைக்கும் தினமும் உனது பாடல்கள், கோவை (அகப்பாடல்கள்)
மிகச்சிறப்பாக அமைத்த கோதை பிராட்டியான நீ என்றும் வாழியே  

படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...