புதன், 7 ஆகஸ்ட், 2024

ஆடிப் பூர விருத்தம்

 

பூரத்திற் பூரித்துச் செகத்துதித்தாள்
பூவைக்கும் பூசைக்குப் புனைந்தளித்தாள்
சாரத்தில் வேதத்தைச் சிறந்தளித்தாள்
சாவில்லா வானாளப் பாவமைத்தாள்
காரொத்த வண்ணற்குத் தனையளித்தாள்
காணிக்கை யண்ணற்குக் கடனளித்தாள்
பாருக்கு வழிகாட்டப் பாவைசெய்தாள்
பாவிக்கு மொழிகாட்டுஞ் செகத்துதித்தாள்
#அறுசீர் விருத்தம்
 
 
சீர் பிரித்து
பூரத்தில் பூரித்துச் செகத்து உதித்தாள்
பூ வைக்கும் பூசைக்குப் புனைந்து அளித்தாள்
சாரத்தில் வேதத்தைச் சிறந்து அளித்தாள்
சா இல்லா வான் ஆள பா அமைத்தாள்
கார் ஒத்த வண்ணன் கு தன்னை அளித்தாள்
காணிக்கை அண்ணன் கு கடன் அளித்தாள்
பாருக்கு வழி காட்டப் பாவை செய்தாள்
பாவிக்கும் மொழி காட்டும் செக(ம்) துதி தாள் 
 
பொருள் 
 
ஆடிப் பூரத்தில் இச்செகத்தில் உதித்தவள் ,
பெருமாட்கு சமர்ப்பிக்கும் மாலையை தான் முதலில் அணிந்தவள்
வேதத்தின் சாரத்தை சிறந்து சொன்னவள்
வைகுந்தம் கிட்ட பா அமைத்தவள்
கரிய நிற திருமாலை மணந்தவள்
அதன் கடனை அண்ணனான இராமாநுசர்க்கு விட்டுச் சென்றவள்
பார் உய்யும் பொருட்டுத் திருப்பாவை செய்தவள்
இப்பாவிக்கும் மொழியின் மேன்மையைக் காட்டும் செகத்தால் துதிக்கப் படும் தாளினைக் கொண்டவள்
 
படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...