ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கல்லால் விருத்தம் (மடக்கு)

கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே ? கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே ? கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே! கல்லா லடித்தேவென் றுற்ற பயனெண்ணே!

 

 

கல்லால் அடித்து ஏவு என்று உற்ற பயன் என்னே? கல்லால் அடித்தே வென்று உற்ற பயன் என்னே? கல் ஆல் அடித் தேவு என்று உற்ற பயன் என்னே! கல் ஆல் அடித்தேவு என்று உற்ற பயன் எண்ணே !

 

கல்லால் அடித்து (பிறரின் குற்றங்களைச் சுட்டி) அதற்கு ஏவல் செய்து நின்று நாம் உற்ற பயன் என்னை? பிறரின் குற்றங்களைச் சுட்டி நாம் தான் சரி என்ற வெற்றி ஈட்டியும் நாம் செய்ததென்னை? கல் ஆல் அடித்தேவு என்று கூறி நாம் உயரும் பயன் யாது! ஆகையால் கல்லாலடித்தேவு என்று நாம் சொல்லி உய்வடையும் உயர்நிலையை எண்ணி மெய்சிலிர்ப்போமாக! கல்லாலடித்தேவு - தக்‌ஷினாமூர்த்தி , மலையில் மன்னும் மற்றும் ஆரல் மீனின் தொடர்புடைய தேவான முருகன், கல்லிலும் ஆல மரத்தடியிலும் விளங்கும் விநாயகப் பெருமான், சிலா ரூபத்திலும் ஆலின் இலையின் தேவனுமான ஆதியாகிய மாயோனுமாம்

 

What is the point of throwing stones at others and helping such acts to point out flaws at others? What did we gain by showing ourselves to be victors by  the act of bringing to fore the faults of others? Instead what all can be achieved by keeping our thoughts centered around Dakshinamoorthy, Murugan, VInayagar and MahaVishnu! Think about the greatness of such an act and do the needful oh mind!

 

The above poem is inspired from the brilliant one of Imayavarambar given below 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி