புதன், 28 ஜனவரி, 2026

என்னை மறந்த விருத்தம்

 என்னை மறந்த நிலைவரினும்

     யாவு மிழந்த நிலைவரினும்

நின்னை மறந்த நிலைவருமோ

    நீத மறந்து மதைவிழையேன்           ஒருநாளும் 


பொன்னை யடைந்த திருடனெனப்

   பூரிப் படைந்து நினதடியைப்

போற்றி நினைந்து மனமகிழப்

    பொய்யை விடுத்து நினதருளால்      புகலேனோ


பின்னை மணந்த வடிவழகன்

    போரூ டுரைத்த வறிவொருவன் 

கன்னங் கறுத்த முகிலனயன்

     குன்றை யெடுத்த விரலழகன்             மருகோனே 


அன்னை அணைத்த அறுமுகவ 

     ஆரூ ரமர்ந்த அரசர்குரு

அஞ்சல் அழித்த அசுரநம

    கொஞ்சு குறத்தி மனமகிழு                  பெருமாளே 


என்னை மறந்த நிலை வரினும்

யாவும் இழந்த நிலை வரினும்

நின்னை மறந்த நிலை வருமோ?

நீத! மறந்தும் அதை விழையேன்  ஒரு நாளும் 


பொன்னை அடைந்த திருடன் என 

பூரிப்பு அடைந்து நினது அடியை 

போற்றி நினைந்து மனம் மகிழ 

பொய்யை விடுத்து நினது அருளால் புகலேனோ?


பின்னை மணந்த வடிவு அழகன் 

போர் ஊடு உரைத்த அறிவு ஒருவன் 

கன்னங் கறுத்த முகில் அனயன் 

குன்றை எடுத்த விரல் அழகன் மருகோனே!


அன்னை அணைத்த அறு முகவ!

ஆரூர் அமர்ந்த அரசர் குரு

அஞ்சல் அழித்த அசுரர் நம!

கொஞ்சு குறத்தி மனம் மகிழும்  பெருமாளே !


நப்பின்னை மணந்த வடிவழகுடையவனுமான. மஹாபாரதப் போரின் ஊடு ஞானம் உரைத்த ஒப்பற்றவுனுமான, கார்முகில் போன்றவனுமான, குன்றைக் குடையாய் எடுத்து உயிர்களைக் காத்தவனுமான கண்ணபிரானின் மருகனே!

அன்னை பராசத்தி அணைத்தலின் பொருட்டு ஒரு உடலும் ஆறுமுகமும் கொண்டவனே, ஆரூர் அமர்ந்த சிவபெருமானுக்கும் குருவானவனே, தேவர்களின் அச்சத்தை அழித்த அசுரர்களுக்கு நமனே, கொஞ்சு குறத்தியான வள்ளி அம்மை மனம் மகிழும் முருகப் பெருமானே


என்னை நான் மறந்து போன நிலையிலும், யாவும் இழந்த நிலையிலும், நின்னை மறந்து போகும் நிலை வருமெனில் அதை ஒரு நாளும் மறந்தும் வேண்ட மாட்டேன் நீதியின் உருவானவனே, பொன்னை அடைந்த திருடனைப் போன்று பூரிப்பு அடைந்து நினது அடியை போற்றியும் நினைந்தும் மனம் மகிழப் பொய்யை விடுத்து நினது அருளாலே நான் புகல மாட்டேனோ?


Oh nephew of the Lord Krishna who married Nappinnai, who expressed the wisdom of the Geetha amidst the battlefield of Kurukshetra, the one who is of a very dark complexion like rain giving clouds and the handsome one who lifted Govardhana hill with his mere little finger!

Oh Lord Muruga of six faces who was hugged by mother Parasakthi to be made into a single form, Guru of even Lord Shiva who resides in Thiruvaroor, the one who destroyed the fears of the celestials by becoming the Lord of Death to the asuras, and the dearest of Devi Valli who delights her mind with your thoughts,

even if a get into a situation of forgetting myself and losing whatever I have, I still will not even forgetfully want to forget you any day, oh Lord who is of the form of justice, and like a thief who delights at the sight of attaining gold, let me also be overjoyed by leaving all that is false and obtain your holy feet and always keep thinking and praising them and retain a joyful mind all with your grace! Will this  not happen?




     










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...