அரவணைக்கும் வான்மதிக் கௌடதத்தைத் தேர்ந்து
தரவிழைவா ரிந்நாள் சரீரந் துலக்கி
யொருமனத்து மந்திர முச்சரித்து மீண்டு
மிரவனைத்தி னாண்மை யிகல்வென் றடைய
வரவணைத்துக் காப்பா ரரண்
அரவு அணைக்கும் வான் மதிக்கு - கேதுவாகிய கோள் மறைத்து ஒளியை அணைக்கும் வானின் கண் வாழும் மதிக்கு
ஔடதத்தை தேர்ந்து தர விழைவார் - அதற்குத் தக்க மருந்தைத் தர விழைபவர்கள்
இ நாள் - கிரகணம் நடக்கக் கூடிய இந்நாளில்
சரீரம் துலக்கி - தனது உடலைக் குளித்துச் சுத்தம் செய்து
ஒரு மனத்து மந்திரம் உச்சரித்து - மனத்தை ஒருமுகப் படுத்தி, மந்திரங்கள் உச்சரித்து
இகல்வென்று மீண்டும் இரவு அனைத்தின் ஆண்மை அடைய - (மதியானது) பகையான கேதுவை வென்று ,மீண்டும் முன்பு போல அனைத்து இரவுகளிலும் இழந்த ஆளுமையை அடைய
அரவணைத்து காப்பார் அரண் - அரணாக அரவணைத்துக் காப்பார்
aravaNaikkum vAnmadhik kaudathaththaith thErndhu
tharavizhaivAr innAL sharIran dhulakki
yorumanaththu mandhira muchchariththu mINdum
iravanaiththin ANmai yigalven Radaiya
varavaNaiththuk kAppA raraN
Those who wish to give the most apt medicine to the eclipsed moon (by Kethu, the snake) , today(during eclipse) clean themselves(shower) and unify their mind and chant mantras and lovingly protect it,so that it defeats the enemy (Kethu) regains its lost prowess and rules the night sky like earlier.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக