எவ்வா யணுகினுஞ் செவ்வேளைச் சேரலா
மெவ்வா யுரைப்பினு மேற்றருள்வான் மந்திரமா
யொவ்வா முறையில்லை யோத லொழியாதே
வெவ்வினைக்கு வேலை யிலை
எ வாய் அணுகினும் செவ்வேளை சேரலாம் - எந்த வழியைத் தேர்வு செய்து செவ்வேளை அணுக முடிவெடுத்தாலும் அவ்வாறே அவனைச் சேரும் அருளை அவன் அளிப்பான்
எ வாய் உரைப்பினும் மந்திரமாய் ஏற்று அருள்வான் - யார் அவனை அழைத்தாலும், எம்மொழியின் அழைத்தாலும் அவன் அதனை மந்திரமாய்க் கொண்டு அருள் பாலிப்பான் ஏனென்றால் அவன் மிக்க காருண்யன் ஆயிற்றே!
ஒவ்வா முறையில்லை ஓதல் ஒழியாதே - அவனை அடைய ஒவ்வாத முறை என்று ஒன்று இல்லை, ஞானம் கிரியை பக்தி அல்லது இன்னும் பல வழியிருந்தாலும் அவன் அருளால் அவனை அடையலாம், ஆதலால் அவன் நாமத்தையும் கீர்த்தியையும் ஓதலை என்றும் ஒழியாது இருப்போமாக , அவ்வாறு செய்தோமெனில்
வெ வினைக்கு வேலை இலை- வெம்மையாக நம்மை வாட்டக் கூடிய வினைகளுக்கு வேலையே இல்லாமல் போகி விடும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக