வெள்ளி, 10 ஏப்ரல், 2026

ஈசன் மீது நேசம் வைப்பார் நிலை மண்டில ஆசிரியப்பா

ஈசன் மீது நேசம் வைப்பார் 

ஞானத் தடைவி னாட்டங் கொள்வார்

செய்யுந் தொழிலே தெய்வ மென்பா

ருய்யு மாறு மவனே யென்பார்க்

கோச்சி நின்று மொப்பா வாரே  

ஈசன் மீது நேசம் வைப்பார் - இறைவன் மீது அன்பு செலுத்தும் பத்தி யோகம் பயில்வாறும் 

ஞானத்து அடைவில் நாட்டம் கொள்வார் - ஞான யோகம் என்னும் முறை பின்பற்றிப் பரம்பொருளை அடைய விழைவாரும் 

செய்யும் தொழிலே தெய்வம் என்பார் - கரும யோகம் பயின்று இறை நிலையை எட்ட விழைவாரும் 

ஓச்சி நின்றும் - உயர்ந்த நிலையில் நின்றாலும் 

உய்யும் ஆறும் அவனே என்பார்கு ஒப்பு ஆவாரே - இறைவனை அடையும் வழியும் அவனே என்றுணர்ந்து முற்றுமாகத் தன்முனைவகற்றி அவனிடம் ஒப்படைப்பார்க்கு ஒப்பு ஆவார்களோ? இல்லை என்பதாம் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நுண்மை தேடி

நுண்மை தேடி நுண்மை தேடி  யண்மை நிற்கு முண்மை காணீர்  பெண்டிர் நல்கு மின்பமு மின்று   கண்டீர் கண்டீர் கருவியி னூடே