வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஆடிப் பூரத் தவதரித்தாள் அறுசீர் விருத்தம்

 ஆடிப் பூரத் தவதரத்தா

ளாவி முழுது மாற்களித்தாள்

பாடிக் களிக்கப் பாவைதனைப்
பாருக் களித்த பல்வளையா
ணாடித் தவிப்பி னயந்துரைத்தா
ணாதற் காகத் திருமொழியைச்
சூடிக் கொடுத்த சுடர்கொடிதான்
பாரா ணீளை திருமகளே

ஆடி பூரத்து அவதரித்தாள் - திருவாடிப் பூரத்தில் அவதரித்தாள் ஆண்டாள்

ஆவி முழுதும் மால் கு அளித்தாள் - தனது உடல் பொருள் ஆவி அனைத்தும் திருமாலுக்கே அளித்தாள்

பாடி களிக்க பாவைதனை பாருக்கு அளித்த பல் வளையாள் - இவ்வுலகே இன்புற்று இருப்பதற்குத் திருப்பாவையை அவளது கொடையாக அளித்தாள் பல வளைகள் பூணுபவள்

நாடி தவிப்பில் நயந்து உரைத்தாள் - காதல் தவிப்பு என்னும் நிலையிலிருந்து நயத்துடன் உரைத்தாள்

நாதனுக்காக திருமொழியை - நாய்ச்சியார் திருமொழியைத் தனது தலைவனான திருமாலுக்காக உரைத்தாள்

சூடி கொடுத்த சுடர் கொடி தான் பாராள் நீளை திருமகளே - தனது மாலையைச் சூடிப் பின் திருமாலுக்கு அளித்த ஆண்டாளே, முப்பெரும் தேவியர்களான பூமி, நீளா மற்றும் திருமகளின் அம்சம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எண்ணக் கடலில் அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

  எண்ணக் கடலி லாழ்ந்தவெனை யீச னினைவி லாழ்ந்திடவை மண்ணைக் கவ்வும் பிறவிதனை வாழும் பொழுதே மாற்றியமை விண்ணு நிலனு மாள்பவனே ...