நிரப்பப் பல்பொரு ணிரப்பு நீங்குமா
விரப்ப வாழ்வென் றிருந்துமென்
வையமே வீடா வீற்றிருப் பார்க்கே
பல் பொருள் நிரப்ப நிரப்பு நீங்குமா - பல வகையான பொருள்கையின் சேர்க்கையினால் மட்டும் வறுமை நீங்குமா என்ன(நீங்காது என்பதாம்);வையமே வீடா வீற்று இருப்பார்க்கு - உலகத்தையே தனது வீடாக கொண்டு துறவு பூண்டு வாழ்வார்க்கு; இரப்ப வாழ்வு என்று இருந்தும் என் - இரந்து உண்டு தான் வாழ்வு என்றால் மட்டும் என்ன ஆகிவிடும் (வறுமை அண்டாது என்பதாம்)
பல பொருள்களைச் சேர்த்து வைக்க மட்டும் வறுமை நீங்குமா (இல்லை) அதே போன்று இரந்து வாழ்ந்தால் தான் என்ன, வையமே தனது வீடாய்க் கொண்டார்க்கு நிரப்பு என்பதே அண்டாது என்பதாம். வறுமையோ செல்வமோ பொருளில் இல்லை அதைக் கொள்வாரின் மனநிலையில் தான் உள்ளது என்பது கருத்து
nirappap palporu Nirappu nInguma
virappa vAzhven Rirunthumen
vaiyamE vIdA vItrirup pArkkE
Does accumlating more and more things remove poverty? (No) Similarly if someone who has renounced the world begs for his food but considers the whole world as his home does poverty ever come close to him?(No) Poverty and wealth are in the mindset, not in the owning of things is the import of the poem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக