வாடு வார்படி வாழ்வெலா
மாது மாயமே மாய்ந்திடா
நேடு நேர்வழி நினைவிலா
நீங்க நேயமே நெஞ்சினிற்
றேடு தீர்வுக டீர்விலை
தெள்ளித் தெளியவே திருவரு
ணாட நல்வழி நல்குவா
ஞால நாகணை நாதனே
மாது மாயமே மாய்ந்திடா - பெண்ணின் மீதுள்ள மயக்கம் அறாதபடி
நேடு நேர் வழி நினைவு இலா- தேடவேண்டிய நேர்வழியைப் பற்றிய நினைவே இல்லாமல்
நெஞ்சினில் நேயம் நீங்க - நெஞ்சில் உள்ள நேய குணமும் நீங்கியபடி
வாடுவார் படி வாழ்வு எலாம் - இவ்வுலக வாழ்க்கை முழுவதும் வாடி உழல்வார்கள் உயிர்கள்
தேடு தீர்வுகள் தீர்வு இலை - மனிதன் மனம் சென்ற படி தேடும் தீர்வுகள் எல்லாம் தீர்வுகள் ஆகா
ஞால நாகணை நாதனே - ஞாலத்தை எல்லாம் கட்டிக் காக்கும் நாகத்தின் மீது உறங்கும் நாதா திருமாலே
தெள்ளி தெளியவே திருவருள் நாட நல்வழி நக்லு வா - அவ்வுயிர்கட்குத் தெளிவு கிட்ட உனது திருவரளை நாட நல்வழியையும் நீயே வந்து அருள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக