செவ்வாய், 1 செப்டம்பர், 2026

ஆறு முகமாய்த் தோன்று அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 ஆறு முகமாய்த் தோன்று 

     மாறு முகமாய்த் தோன்றிக்

கூறு மடியார் துயர்தீர்  

      கூறு மடியா லவுணர்

நீறு முகமாய் நீத்த 

       நீறு முகமார் நீத 

வேறு முகமாய்ச் செய்யு 

     மேறு மயில்வா கனனே  

ஆறு முகமாய் தோன்றும் - கங்கை என்னும் ஆற்றில் உதித்த 

ஆறு முகமாய் தோன்றி - சண்முகங்களோடு தோன்றி 

கூறும் அடியார் துயர் தீர் - விண்ணப்பிக்கும் அடியார்களின் துயரைத் தீர்க்கும்

அவுணர் கூறு மடியால் நீறு முகமாய் நீத்த - சூர் முதுலிய அரக்கர்களை வேலாயுதத்தால் கூறிட்டு மடிய நீறாக்கி அழித்த 

நீறு முகம் ஆர் நீத - விபூதி அணிந்த அழகிய முகத்துடைய நீதிமானே

ஏறு முகமாய் செய்யும் - அன்பர்கட்கு என்றுமே ஏறு முகம் தான் வாழ்வில் என்ற படி அருள் செய்யும் 

ஏறு மயில் வாகனனே - மயிலை வாகனமாய்க் கொண்ட முருகப் பெருமானே 

 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆறு முகமாய்த் தோன்று அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

  ஆறு முகமாய்த் தோன்று       மாறு முகமாய்த் தோன்றிக் கூறு மடியார் துயர்தீர்         கூறு மடியா லவுணர் நீறு முகமாய் நீத்த         நீறு முகமார...