இடையூறு வாட்டும் போதி
லிடைவிடா துன்னை யெண்வோங்
கொடைநூறு தந்தா யானாற் கொள்வோமோ வுன்ற னெண்ண
மடைமாறு மனத்தை மாற்றி
படைநூறு வீழ நின்ற
மடைமாறு மனத்தை மாற்றி
வழுவாது னெண்ண முள்ளப்
படைநூறு வீழ நின்ற
பரந்தாம வெம்மை மாற்றே
இடையூறு வாட்டும் போதில் - இடையூறுகள் வந்து எம்மை வாட்டும் பொழுதில்
இடை விடாது உன்னை எண்வோம் - உன்னை எண்ணத்தால் எப்போதும் அழைப்போம் எம்மைக் காப்பதற்கு
கொடை நூறு தந்தாய் ஆனால் - அவ்வாறு நீ எம்மைக் காத்து அதன் பின் கொடை நூறு வழங்கும் பொழுதோ
உன்றன் எண்ணம் கொள்வோமோ - உன்னை எண்ணத்தால் எண்ணி நிற்கின்றோமோ? இல்லை என்பதாம்
மடை மாறும் மனத்தை மாற்றி - ஒன்றினின்று இன்னொன்றிற்குத் தாவும் மனத்தின் இயல்பை மாற்றி
வழுவாது உன் எண்ணம் உள்ள - எப்போதும் உனது நினைவிலே நிலைத்து அம்மனம் இருக்கும் படி
படை நூறு வீழ நின்ற பரந்தாம - நூறு கௌரவர்களும் எண்ணற்ற சேனைகளும் வீழும்படி மா பாரதப் போர் நடத்திய பரந்தாமனே
எம்மை மாற்றே- எம்மை நீ மாற்றுவாயாக , ஏகாரம் ஈற்றசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக