கோடுடைய வழகன் மயிலேறியொர் கூர்வேல் கரத்தேந்துங்
காடுடைய குறத்தி மனத்தாளுநங் கந்தன் படையாறுவீடுடைய வொருவன் புகழ்பாடடி யார்தம் வினைதீர்க்கும்
பீடுடைய வருண கிரிநாதரெந் நெஞ்சிற் பிரியாரே
கோடு உடைய அழகன் - மலைகளைச் சொந்தமாகக் கொண்ட அழகன்; மயில் ஏறி ஓர் கூர்வேல் கரத்து ஏந்தும் - மயிலை வாகனமாகக் கொண்டு ஒப்பற்ற கூர்வேலைக் கரத்தில் ஏந்தும்; காடுடைய குறத்தி மனத்து ஆளும் நம் கந்தன் - காட்டின் கண் வாழும் குறத்தியான வள்ளியம்மையின் மனத்தை ஆளும் நமது கந்தன்; படை ஆறு வீடு உடைய ஒருவன்- ஆறு படை வீட்டை உடைமையாகக் கொண்ட ஒப்பற்றவன்; புகழ் பாடு அடியார்தம் வினை தீர்க்கும் - திருப்புகழைப் பாடும் அடியார்களின் வினையைத் தீர்க்கக் காரணமான;பீடுடைய அருண கிரி நாதர்- பெருமைக்குரிய அருண கிரி நாதர்; எம் நெஞ்சில் பிரியார் - எமது நெஞ்சை விட்டு பிரியவே மாட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக