வெள்ளி, 18 செப்டம்பர், 2026

செக்கர் வான் சந்த விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 செக்கர் வானுன் மேனி யாவி யக்கர் சித்தர் நாதனே

சொக்க நாதர் சீட ரான சிக்க லாளு தேவனே
மக்க டேவர் மாண்ப ளிக்கு மங்கை மார்பன் மருகனே
வக்கி லானுன் மாண்பு ரைக்க வாக்க ளிக்க வேண்டுமே


செக்கர் வான் உன் மேனியா - சிவந்த வானம் தான் உன் மேனியாக விளங்கும் வியப்பிற்குறிய;இயக்கர் சித்தர் நாதனே - யக்‌ஷர்கட்கும் சித்தர்கட்கும் தலைவனே;சொக்கநாதர் சீடர் ஆன சிக்கல் ஆளும் தேவனே - சொக்கநாதரான சிவபெருமானே நுமக்குச் சீடராகக் கொண்ட சிக்கல் சிங்கார வேலனே;மக்கள் தேவர்;மாண்பு அளிக்கும் மங்கை மார்பன் மருகனே- மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் போற்றும் திருமாலின் மருகனே;வக்கிலான்- வக்கற்றவனாக நானிருந்த போதிலும்; உன் மாண்பு உரைக்க வாக்கு அளிக்க வேண்டுமே- உனது பெருமகளைப் பாடும் படியாக எனக்கு வாக்கின் சீர்மை அளிப்பாயாக



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கங்கைக்கு மன்னுபுகழ் கட்டளைக் கலித்துறை

கங்கைக்கு மன்னு புகழ்தந்த தாமரைக் காலுடைய செங்கைக்கு மின்னு நகையாழி சங்கந் திகழ்ந்தொளிரு நங்கைக்கு மன்ன  வனேயிரு நான்கு நயந்துரைத்த  மங்கைக்...