முப்புரமு மெரிக்க நகைத்தான்பணி திங்கண் முடிதும்பை
யப்பணிவா னடம்ப யிலுங்காடுறை யம்ப லவாணன்மேற்செப்பரிய தமிழ்பா டுபிள்ளைக்கவி யுண்ணா முலையுண்ட
வொப்பிலாத தமிழ்ஞா னசம்பந்தனி னோங்கு புகழ்பாடே
மு புரம் உம் எரிக்க நகைத்தான் - முப்புரங்களையும் தன் சிரிப்பாலே எரித்தவன்; பணி திங்கள் தும்பை அப்பு முடி அணிவான் - பாம்பும், பிறைச்சந்திரனும் தும்பை மலரும் கங்கை நதியும் தனது சடா முடியில் அணிபவனான சிவபெருமான்; நடம் பயிலும் காடு உறை அம்பலவாணன் - சுடுகாட்டிலும் வாழ்பவனான தூய வெளியினும் வாழ்பவனான ஆடல் அரசனான சிவன் மேல்;
உண்ணா முலை உண்ட- உண்ணாமுலை அம்மனின் ஞானப் பாலைப் பருகிய;
செப்பு அரிய தமிழ் பாடு பிள்ளை கவி- சொல்வதற்கு அரியவகை தமிழ் பாடும் பிள்ளைக் கவியான;ஒப்பு இல்லாத தமிழ் ஞான சம்பந்தனின் ஓங்கு புகழ் பாடு- ஒப்பற்ற திருஞான சம்பந்தரின் புகழை நாம் பாடுவோமாக!
செய்யுள் கருதி முடி அணிவானும் தும்பையும் அப்பும் முன் பின்னாக வந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக