உள்ளுறங்கு மாற்றலா யுயிர்களுள் ளொளிந்தனை
தெள்ளமிழ்தின் வடிவமாய்ச் சிரங்கரந்து நின்றனை
யெள்ளிருந்த வெண்ணெயென்ன வெங்குமேவு முன்னைநாங்
கொள்ளுகின்ற பாதைசொல்லு கொன்றைநாதர் பாகளே
உள் உறங்கும் ஆற்றலாய் உயிர்கள் உள் ஒளிந்தனை- அனைத்துயிர்களிலும் உறங்கும் ஆற்றலான குண்டலினி சத்தியாக ஒளிந்த கொண்டனை; தெள் அமிழ்தின் வடிவமாய் சிரம் கரந்து நின்றனை- தெளிவான அமுதத்தின் வடிவினளாக சிரத்தில் ஒளிபவளும் நீ தான்;எள் இருந்த எண்ணெய் என்ன எங்கும் மேவும் உன்னை நாம் எப்படிஎள்ளுக்குள் எண்ணெய் எப்படி இரண்டற எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கின்றதோ அவ்வாறு நீ எம் உள்ளே எங்கும் நிறைகின்றாய் அப்பேற்பட்ட உன்னை நாங்கள்;கொள்ளுகின்ற பாதை சொல்லு கொன்றை நாதர் பாகளே- அடைவதற்குப் பாதையையும் நீயே தான் சொல்ல வேண்டும் கொன்றை அணியும் சிவபெருமானின் பாகத்தில் நின்றவளே, அல்லது அவரை நடத்தும் தேரோட்டியாக வழிநடத்துபவளே என்றும் கொள்ளல் தகும்!
uLLuRangu maatralaa yuyirgaLuL LoLindhanai
theLLamizhthin vadivamaaych chirangarandhu ninRanai
yeLLirundha veNNeyenna vengumEvu munnainaang
koLLuginRa paadhaisollu konRainaadhar paagaLE
You hid yourself as the dormant force of kundalini among the Jeevas, you also hid yourself as the ambrosia that secretes within the head of the seeker (after meeting of Shiva and Shakti!) You are like the oil which is unmanifest in the sesame seeds but pervades everywhere! Tell us oh Goddess who is the driving force behind Shiva or who is one half of the Lord who wears the konRai flowers how we should we reach you/understand you by helping us as a Guru too!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக