செவ்வாய், 27 அக்டோபர், 2026

திறப்பான் கதவும் வெண்பா (செவாயிற் செவ்வேள்)

திறப்பான் கதவுந் திறக்காது போகு மறப்பா னமதேதம் வாழ்வின் - மறைப்பின்றித் தூயதமிழ் தந்தான் றுதிபாட லெங்கடனாஞ் சேய(ன்)புகழ் சொல்வதுவே சொல்

வியாழன், 22 அக்டோபர், 2026

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)


காப்பு — நேரிசை வெண்பா

முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ் 

செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே 

னான்முகனைத் தான்படைத்த நாரணன்றன் றாமரைத்தாள் 

யான்பணிய நல்கு மருள்

செவ்வாய், 20 அக்டோபர், 2026

நினைவும் செயலும் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 நினைவுஞ் செயலு நினதருளே

நினைவில் லுறக்க நினதருளே

புனைவு நிசமு நினதருளே

புகழு மிகழு நினதருளே
மனையு மகவு நினதருளே

மலைவில் லறிவு நினதருளே
முனைவு மறந்து நினமலர்தாண்

முருக வெமைசேர்த் தருள்வாயே

வியாழன், 15 அக்டோபர், 2026

விழையாது அணைந்திடு கலித்துறை

 விழையா தணைந்திடு காதலின் மேன்மையைச் சற்று

மழையா தணைந்திடு செல்வத்து மேன்மையை யங்கத்
துழையா தணைந்திடு புகழ்தரு மேன்மையை யொத்தாய்
மழையே நினதரு மைவிளங் காதென்ன வாழ்வே

விழையாது வருவாய் கலி விருத்தம்

விழையாது வருவாய் விழைந்தால் வரமறுப்பா

யழையாது வருவா யழைத்தா லொளிந்திடுவாய்
மழையாகப் பொழிவாய் மலர்வாய் மறைவாக
நுழையாத நெஞ்சை நொறுங்க வைப்பாயே

புதன், 14 அக்டோபர், 2026

உள்ளுறங்கும் விருத்தம்

 உள்ளுறங்கு மாற்றலா யுயிர்களுள் ளொளிந்தனை

தெள்ளமிழ்தின் வடிவமாய்ச் சிரங்கரந்து நின்றனை
யெள்ளிருந்த வெண்ணெயென்ன வெங்குமேவு முன்னைநாங்
கொள்ளுகின்ற பாதைசொல்லு கொன்றைநாதர் பாகளே

செவ்வாய், 13 அக்டோபர், 2026

தீராப் பிணியும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 தீராப் பிணியுஞ் சிறப்பா மதுவின்றி

யோரா துழலு முயிர்க்கிங்குச் -சீராளும்
பார்வதி மைந்தனைப் பைந்தமிழ்க் காவலனைச்
சீர்கதி சித்திக்கு மோ

செவ்வாய், 6 அக்டோபர், 2026

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று

மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை
கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங்
கண்ட வந்நொடி யேகவி கள்பிறப் பெடுக்கும்

எண்ணக் கடலில் அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எண்ணக் கடலி லாழ்ந்தவெனை

யீச னினைவி லாழ்ந்திடவை

மண்ணைக் கவ்வும் பிறவிதனை
வாழும் பொழுதே மாற்றியமை
விண்ணு நிலனு மாள்பவனே

வேலு மயிலுங் கொண்டவனே
கண்ணுங் கருத்துங் கொண்டன்பர்க்

காக்குங் கந்தப் பெருமானே

ஒருத்தி மகனென கலித்துறை

 ஒருத்தி மகனெனச் சிறைதனிற் பிறந்துபின் னொளிவா

யொருத்தி மகனென மறுகரை வளர்ந்தநல் லொளியை
யிருத்தி மனத்தினி லிசைமிகு மின்றமி ழேத்தக்
கருத்திற் றுளிர்விடு மறிவொடு கனிவெனு முயர்வே

நித்தனுன்னை எழுசீர் சந்த விருத்தம்

 நித்த னுன்னை நேடி வந்து நீளு துன்ப மாய்த்திடச்

சத்த மிக்கு னாம மேத்து மன்பர் நாவின் சாட்சியா

பத்தி னிக்கு மேன்மை தந்த பார்ம கட்கு நாதனாம்

பத்த னுக்கு வெளியி னின்ற பாண்டு ரங்க விட்டலே

திங்கள், 5 அக்டோபர், 2026

ஆடி வருவான் வெண்பா

ஆடி வருவா னழகு மயின்மீது

நேடி யழிப்பா னிசாசரரைக் - கோடு

மரமேசு வேலாள்வான் சௌமிய னாறு

சிரமாள்வான் சுந்தரத்தாள் சேர்    

கண்விரும்பு காட்சி சந்த விருத்தம்

  கண்விரும்பு காட்சியாய்க் கனிந்ததே னகத்துளே பண்விரும்பு பாடலாய்ப் பதிந்ததே னகத்துளே யெண்விரும் பெழுத்ததா யிணைந்ததே னகத்துளே மண்விரும்பு மே...