வனித மங்கையின் வேல்கரம் வாங்கியே புனித மற்றவர் போக்கறச் செற்றவன் மனித மற்றவர் வஞ்சனை மாய்த்துநன் மனித பத்தரின் மாவிளக் கேற்றனே
வனித மங்கையின் வேல் - ஒப்பீடற்ற அழகையுடைய மங்கையான பார்வதியின் வேலை;கரம் வாங்கியே-கையினில் வாங்கப் பெற்று;புனிதம் அற்றவர் போக்கு அற செற்றவன்- புனிதமற்ற அவுணர்களின் போக்கு அற்றுப் போகும் படியாகச் செற்ற முருகப் பெருமான்;மனிதம் அற்றவர் வஞ்சனை மாய்த்து- மனிதத் தன்மை சிறிதும் அற்று வஞ்சனையால் முருகப் பெருமானுக்கு விளக்குக் கூட திருப்பரங்குற்றத்தில் ஏற்றவிடாது செய்ததை மாய்த்து;நல் மனித பத்தரின் மா விளக்கு ஏற்றனே- நல்ல மனித பத்தர்களின் மா தீபத்தை ஏற்று உவந்தனன் என்றவாறு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக