வியாழன், 5 நவம்பர், 2026

தந்திவளர் கொம்பு கரம் சந்தக் கலி விருத்தம்

தந்திவளர் கொம்புகரங் கற்பிலடைந் தானைத்

தந்திவர வேடமக ளன்பையடைந் தானைச்

சந்தமிகு செந்தமிழி லேத்தியுவந் தானை

யந்திபகல் சிந்தைசெய வாசியற்ற லாமே 

வாழ்க்கையின் பொருள் என்ன -கலி விருத்தம்

 வாழ்க்கையின் பொருளென்ன வாதில் வெல்வதா

யாக்கையைச் சுற்றியே யெண்ணஞ் செல்வதா
 
தீக்கதிர் வினைகளைத் திண்ணங் கொல்வதா
 
வாக்கினால் யாக்கையான் மனத்தாற் றூய்மையே

அருள் தரும் அமுதே

 அருடரு மமுதே யரிமரு கா

அணிதிக ழறுபடை மயில்வீ ரா திரிபுர மெரிசெ யரன்மைந் தா தெளிதமிழ் விரும்புஞ் சிவைபா லா அருணை முனியகத் தியரர னார்க் காழ்பொரு லுரைத்திடு மறுமுக னார்

அருவுரு வருவுரு கடந்தோ னே ஆக்களி னகத்தினி லமர்ந்தோ னே குக்குடக் கொடியுடைக் குமரோ னே குஞ்சர கான்பிடி மணந்தோ னே சரவண பவனே முருகே சா கரிமுகற் கிளையே குகனே சா

காரிடி மின்னலாய் கலி விருத்தம்

 காரிடி மின்னலாய்க் கவனத் தீர்க்குநங்

கூர்வடி வேலவன் கொற்றச் செந்தமி
ழீரடி யாற்பொரு ளியம்பு பாவலன்
சீரடி சேர்பவர்க் கெளிதாஞ் செய்யுளே

சிந்தனையாய் எண் சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

 சிந்தனையாய் வந்தெமை யாள்வா னெவனோ

சஞ்சலந்தீர்த் தெமைவந் தாள்வா னெவனோ

செந்தமிழாய் வந்தெமை யாள்வா னெவனோ

செஞ்சுடர்வே றன்னை யாள்வா னெவனோ
சந்ததமு மெமைக்காத் தருள்வா னெவனோ

சங்கதமாய் வந்தெமை யாள்வா னெவனோ
கந்தனெனு பேரரு ளாள னவனே

கார்மயின் மேலமர்ந் தாளும் பரனே

தந்திவளர் கொம்பு கரம் சந்தக் கலி விருத்தம்

தந்திவளர் கொம்புகரங் கற்பிலடைந் தானைத் தந்திவர வேடமக ளன்பையடைந் தானைச் சந்தமிகு செந்தமிழி லேத்தியுவந் தானை யந்திபகல் சிந்தைசெய வாசியற்ற லாமே...