வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை -கலி விருத்தம்
வாக்கிற்கு அருண கிரிவாழ்ந்த தண் நா மலை வாக்கில் கருண கிரி வாழ்ந்த தண்ணா மலை வாக்கில் கருணகிரி வாழ்ந்தது அண்ணா மலை வாக்கிற்கு அருணகிரி வாழ்ந்தது அண்ணாமலை
வாக்கிற்கு அருண ( விடியலைப் போல் உள்ளவரே) கிரி வாழ்ந்த ( மலை மலையாக சென்று முருகனைக் காண ) தண் நா ( குளிர்மை பொருந்திய நா - புலமை ) உள்ள மலையப்ப போன்ற புகழைக் கொண்டவரே
வாக்கில் கருண ( கொடுத்த சொல்லை மீறாத கருணனைப் போல) புகழுடையவர் கிரி ( மலைபோல ) வாழ்ந்த தண்ணா ( தாழ்விலா) மலை ( உவமை) வாக்கில் கருணகிரி ( கருணை மலை) வாழ்ந்தது அண்ணா மலை ( பிறரால் அண்ட முடியாது உயர் புகழ் பெற்று) வாக்கிற்கு அருணகிரி ( நாதர்) அவர் வாழ்ந்த ஊர் திருவண்ணாமலை
ஏக பாத மிறைக்கவிக் காழியார் ஏக பாத மிறைக்கவிக் காழியார் ஏக பாத மிறைக்கவிக் காழியார் ஏக பாத மிறைக்கவிக் காழியார் -கலிவிருத்தம்
ஏக பாதம் மிறைக்கவிக்கு ஆழி யார் ஏக பாதம் மிறைக்கவிக் காழியார் ஏக பாதம் இறைக்கவிக்கு ஆழி யார் ஏக பாதம் இறைக்கவிக் காழியார்
ஏக பாதம் எனும் சித்திர கவி வகையில் ஆழம் கண்டவர் யார்? அவர் திரு ஞான சம்பந்தர் பெருமானே தனித்துவமான இறைக்கவிக்கென்றே பிறந்த ஆசான் யார் ? அவரும் திரு ஞான சம்பந்தர் பெருமானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக