செவ்வாய், 19 செப்டம்பர், 2023

விநாயகர் சதுர்த்தி

 விநாயகர் மீது நான்மணி மாலை தொடுக்க ஒரு சிறு முயல்வு 

 

படம் 

வேழ முகத்தானை விண்ணோ ரமுதொளித் தானைபய வாழி படுத்தானி னாழி யெடுத்துகந் தானைபெரும் பேழை வயிற்றானைப் ரீதியா லிக்குகந் தானையுறு தோழி யணையானை யாயரு டந்தானை யுள்ளுவனே -#கட்டளைக்கலித்துறை

உள்ளுமுள்ளந் தூய்மையாக உன்னதமாய் வாழவே கள்ளமற்ற வாக்கருளுங் கண்ணுதலான் மைந்தனை வெள்ளமென்ன பாவெடுத்து வீற்றிருப்போ நாளெலாம் பிள்ளுவத்தைச் சாடவந்த பிள்ளையாரைப் போற்றியே #கலிவிருத்தம்

போற்றித் தொடங்கப் பிடிக்கும் வினையகலும் ஆற்றங் கரையுறை ஆதியை - பேற்றைத் தருமுமை பாலகன் சங்கத் தமிழை அருளின னௌவைக் கழகு #வெண்பா

அழகு மயிலேறி அருமைக் கனிதேடி

சுழலு முலகைச் சுற்றக் குமரன்

வருமுன்னே இருந்த இடமே காதுனக்

குருதந் தவம்மை யப்பனைச் சுற்றித்

தேவ கனிபெற்றுத் தேவ னளிபெற்

 றாவினன் குடிசென் றாண்டி யெனநிற்க

 முருகன் கோவம் கொள்ள உயர்ந்த

 பெருமைக் குரிய பெற்றோரை உலகத்

 தோடு மொப்பிடும் போது

ஞாலத் தலையாய் நாட்டி நின்றாயே #ஆசிரியப்பா

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...